Archive | October 2012

எனக்குப் பிடித்த பாடல்கள்..

வசீகரா கள்வனே..ராஜகுமாரா.. எங்கிருந்து வந்தாயடா.. ஒன்றா இரண்டா ஆசைகள்..எதைச் சொல்ல எதை விட?

 
மனதிலிருக்கும் மன்மதனுக்காய் உருகிப்பாடும் பாடல்கள்.. என் மனசுக்குப் பிடித்த கீதங்கள்.. இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்..

 

கனாக்களுக்குள் புகுந்து என்னைக் களவாடிய கண்ணனே.. எங்கிருந்து வந்தாயடா?

தாமரையின் வரிகளுக்கு குரல் கொடுத்தவர் சந்தனபாலா.. திரைப்படம் 5ஸ்டார்..

 

எனை மறந்தேன்.. உனைப் பார்த்த அக்கணத்திலிருந்து..

சித்ராம்மா.. ரஹ்மானின் இசையில்

 

 

எனக்காய் வாழும் அவன் யாரென்று எனக்கு மட்டும் சொல்லிவிடு மேகமே..

வானம் வசப்படும் திரைப்படத்திற்காக.. அமரர். மகேஷ் அவர்களின் இசையில் ஹரிணி பாடியது..

 

தென்றல் தொட்டாலும் உன் ஞாபகம்.. தென்னை அசைந்தாலும் உன் ஞாபகம்..

கிழக்கும் மேற்கும் திரைப்படத்திற்காக பவதாரிணி பாடியது.. பாடலுக்கான இசை இசைஞானி..

 

எனக்காய் காத்திருக்கும் உன்னை உயிர்போல் பிடிக்கிறதடா..

சுபாஜியின் குரலில் மறக்கமுடியாத பாடல்

 

நீயில்லாத நான் நானில்லை..

பரத்வாஜின் இசையில் வந்த அழகான பாடல்.. சித்ராம்மாவின் குரலில்..

 

உன்னோடு உறவாகும் நாட்களை நாணத்துடன் எண்ணிக்கொண்டு உயிர்வாழ்கிறேன்..

அமரர் சுவர்ணலதாவின் ஜீவன்மிக்க குரலில்..

 

உன் சின்னச் சின்ன கரிசனைகளால் என்னைச் சிதறவைக்கிறாயே..

சாதனா சர்கம்.. ஏ. ஆர். ரஹ்மான்

 

நீ எனக்கே எனக்கானவன்.. என்னவன்..

பாம்பே ஜயஸ்ரீ.. ஹாரிஸ் ஜெயராஜ்

 

ஆழமனதுக்குள் புதைந்து கிடக்கும் அத்தனை ஆசைகளையும் உன்னோடு அனுபவிக்க வா..

பம்பாய் ஜயஸ்ரீ.. தாமரையின் வரிகளுடன்

 

இறுதியாய்.. என் மனங்கவர்ந்த இந்த பியூஷன் பாடல்.. உன்னிக்கிருஷ்ணன் அவர்களின் துணைக்குரலுடன் கல்யாணி மேனன் பாடியது..

 

பாடல்கள் எனக்குப் பிடித்ததைப் போல உங்களுக்கும் பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..

மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..