Archive | January 2014

கீதாஞ்சலி..

சோகப்பாடல்கள் என்றால் அது 80 களில் வந்த பாடல்கள் தான். இன்றும் எத்தனையோ உடைந்த காதல்களுக்கும், இடிந்த மனதுகளுக்கும், சோக இசையாலே ஒத்தடம் கொடுத்து ஆறுதல் தருவது இந்தக் காலப் பாடல்களே..

கேட்கும் போதே ஒவ்வொரு ஜீவ அணுக்களுக்குள்ளும் ஊடுருவி, நம்மை ஏதோ ஒரு ZEN  நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றன இப்பாடல்கள்.. என் முந்தைய தலைமுறைக்குப் பிடித்த இந்தப் பாடல்கள், எனக்கும், எனக்குப் பின்வரும் தலைமுறைக்கும் கூட பிடிக்கும் என்பதே இந்தப் பாடல்களின் வீச்சுக்கு சான்று..
ஆண்குயில்கள் தனியாய் இசைபாடும் பாடல்கள் இன்று உங்களுக்காய்..

ஒரேயொரு பார்வை பார்த்தால் என்ன மானே..

நீ நடந்த பாதையெல்லாம் உன் நினைவுகளைத் தேடுகின்றேன்

ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை.. சாவொன்று தானா நம் காதல் எல்லை

தேடி வந்த வேளை வேடன் செய்த வேலை.. சிறகுகள் உடைந்ததடி, குருதியில் நனைந்ததடி

சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்.. நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்..

காத்தோடு போகும் காத்தாடி நான்..

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா?

காற்றே பூங்காற்றே.. என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய்ச்சொல்லு

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை நான் தூதுவிட்டேன்

களையிழந்த மாடத்திலே முகாரி ராகம்

அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா?

காதல் பொய்யானது வாழ்கை மெய்யானது..

அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே

பொழுதாகிப்போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னைத் தேடுது..

கீதாஞ்சலி..

80 கள் போலவே 90 களில் வெளிவந்த பாடல்களும், மகத்துவமிக்கவைதான். ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பகாலம், தேவா, வித்தியாசாகர் போன்றோர் இசைஞானியின் இசையோடு போட்டி போட்ட காலம்..  அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த மனது மறக்காத காதல் கீதங்கள் இன்று கீதாஞ்சலியில்..

 

உனக்கும் எனக்கும் உள்ள பந்தம், தெய்வம் தந்தது..

திரைப்படம்: எல்லாமே என் காதலி

 

உன் விழி சொல்லும் பாஷைகளை மொழிமாற்றிப்பார்த்தேன்.. காதல் என்று சந்தமாய் சொல்கிறது சத்தம் போடும் இதயம்..

திரைப்படம்: சுபாஷ்

 

சர்க்கரைப்பாகால் வர்ணம் செய்து உன் பெயரை உள்ளமெங்கும் எழுதி வைத்து ரசிக்கிறேன்..

திரைப்படம்: செங்கோட்டை

 

இக்கணம் இறக்கலாம் போலிருக்கிறது இதழால் ஒற்றியெடுத்து உன் இதயத்து ரகஸ்யங்களை சொல்லும் காதலில் திளைத்து எழமுடியாமல் தவிக்கும் போது..
திரைப்படம்: தாயின் மணிக்கொடி

 

இந்தக் கனவுக்குள் புதைந்து கரைந்து போய்விடுகிறேன்..
மலருக்குள் மறைந்திருக்கும் நறுமணம் போல்
உன் காதல் ஆடையாய் தழுவிநிற்கும்
இந்தக் கனவுக்குள்..

திரைப்படம்: லவ்பேர்ட்ஸ்

 

தனியாய் தவிக்கவிட்டு எங்கிருந்தாய் இத்தனை நாளாய்..
தவித்து உறைந்து திகைத்து நிற்கும் என்னை விட்டு நீங்காதே காதலே..

திரைப்படம்: மே மாதம்

 

நேரம் காலம் தேதி பார்க்காமல் கண்ணுக்குள் நுழைந்தாய்
கணந்தோறும் உன் காதலால் கரைந்து போகிறேன்..

திரைப்படம்: கோயமுத்தூர் மாப்பிள்ளை

 

நீ எனக்குள் நுழைந்த நேரம் இதயத்துக்குள் மலைமுகட்டு மலர்த்தோட்டத்தில் மழைபொழியும் வாசம்..

திரைப்படம்: வான்மதி

 

ப்ரியத்துக்கு ப்ரியம் வந்ததில் பிரியாத நேசம் வந்தது உன்மேல் எனக்கு

திரைப்படம்: ப்ரியம்

 

உன் காதல் மெட்டுக்களால் இசைந்து போய் நிற்கிறது உன் நினைவுகளின்றி இயங்க மறுக்கும் இதயம்..

திரைப்படம்: ராசையா

 

உன் மௌனத்தால் கொன்ற என்னை மந்தகாசப் புன்னகையால் உயிரூட்டிவிடு

திரைப்படம்: கர்ணா

 

 

என் காதல் நூலில் கலந்திருக்கும் மை போல உள்ளத்து செல்களிலெல்லாம் உன் காதலை எழுதிச் சென்றால் என்ன செய்ய நான்..

திரைப்படம்: அரசியல்

 

முதன்முதலில் உன் முகம் பார்த்த கணம் முதல்

மயங்கி நிற்கிறேன்..

முடிவிலியாய் தொடரும்

உன் முத்தத்திற்குள்

மூச்சுவிட முடியாமல் அமிழ்ந்தபடி..

 

 

இனிய தமிழ்ப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

என் இனிய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்..

பிறந்திருக்கும் தைமகள், அனைவருக்கும் நல்வழி அளிப்பாள் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தனைகளும்.
தமிழர் திருநாள் வாழ்த்துகள்..

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயர கோனுயர்வான்!

pongal-105

கீதாஞ்சலி..

80களில் வெளிவந்த பாடல்கள் இன்று வரை மனதை வீட்டு நீங்காமல் இருப்பதே அந்தப் பாடல்களின் சிறப்பை சொல்லிவிடுகின்றன.

 
பெண்குரல்களில் ஜானகி அம்மா, சுசீலாம்மா, சித்ராம்மா,வாணி ஜெயராம் அம்மா,  ஜென்சிம்மா, சைலஜாம்மா என திரையிசைக்குயில்கள் ஆட்சி செய்த காலம் அது.. அவர்களின் குரல்களில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு இது..

 

பெண்மையின் மென்மையுடன், வார்த்தைகளின் வீரியம் கலந்து இன்று வரை மனதுக்கும் அலையாடும் இந்தப்பாடல்களின் ஞாபகம் உங்களையும் வசப்படுத்தும்..

கீதாஞ்சலி..

என மனதுக்கு நெருக்கமான முதல் பாடலுடன் தொடங்குகிறேன்.. அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இசைஞானியின் இசையில், ஜானகி அவர்கள் பாடிய பாடல். எப்போது கேட்டாலும் புத்துணர்வு தரும் வரிகளோடு..

 

 

முள்ளும் மலரும் திரைப்படத்தில் ஜென்சி பாடிய பாடல்.. தனக்காய் பாடும் தன்னிலை மறந்து மயங்கி நிற்கும் பெண்ணின் மன உணர்வுகள் எத்தனை அழகாய்..

 

ஜானி.. என் வானிலே ஒரே வெண்ணிலா.. பியானோ இனிமையா இல்லை ஜென்சியின் குரல் இனிமையா.. காதலித்த, காதலித்துக்கொண்டிருக்கிற பெண்களின் தேசிய கீதம் இது

 

சின்ன வயதில் கேட்ட பாடல் இது.. கல்யாணராமன் திரைப்படத்திற்காக சைலஜா பாடியது

ஸ்ரீதேவிக்கு இன்றுவரை பேர் சொல்லும் பாடல் இது.. செந்தூரப்பூவே

 

எனக்கு மிகப்பிடித்த திரைப்படங்களில் ஒன்று.. பாரதிராஜாவின் இயக்கத்தில் கண்ணன், ராதா நடித்த பாடல்காட்சி. இன்று வரை கண்ணன் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறேன்..

நிழல்கள் திரைப்படம் என்றதும் மடை திறந்து என்ற பாடல் தான் அநேகமாக ஞாபகம வரும்.. அந்தப்படத்தில் ஒலித்த மற்றுமொரு இனிய பாடல்.. ஒரு பெண்ணின் ஏக்கத்தை எடுத்துச்சொல்கிறது

 

இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் மனசுக்குள் இழைந்தோடும்.. உல்லாசப்பறவைகளுக்காய் ஜென்சி

கல்லுக்குள் ஈரம் படத்திற்காக ஜானகி பாடிய பாடல்.. சட்டென்று ஞாபகத்திற்கு வராவிட்டாலும், இனிமையான பாடல்களில் ஒன்று

 

கிழக்கே போகும் ரயில்.. ரயிலைக்கூட தோழியாக்கி தூது போகச்சொல்லும் காதல் மனசு

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்.. ஆனால் அதுவும் ஆனந்தம்..

முதல் இரவு.. இது திரைப்படத்தின் பெயர்.. இனிமையான மற்றொரு பாடல்

 

இன்னும் எத்தனை எத்தனை இனிமையான பாடல்கள் இருந்தாலும் ஒரு மணித்தியாலத்திற்கு ஏற்ற வகையில் தொகுத்த பாடல்கள் இவை.. உங்களுக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன்..
மீண்டும் மற்றுமொரு கீதாஞ்சலியின் ஊடாக உங்களுக்கு பிடித்த பாடல்களுடன் சந்திக்கிறேன்..

அன்புடன்,

Maaya..

கீதாஞ்சலி – அறிமுகம்

download (1)

கீதாஞ்சலி – நான் வானொலியில் பணியாற்றும்போது வடிவமைத்து செய்த நிகழ்ச்சி..

Down the memory lane என்பது போல அந்தக்காலகட்டத்திற்கே பாடல்களைக் கேட்பவர்களைக் கொண்டுசெல்லும்,  மறந்து போனாலும், மனதில் நின்று மறைந்து போகாத பாடல்களை தொகுத்து,  நேயர்களின் விருப்ப பாடல்களாக வழங்கிய நிகழ்ச்சி அது..

வானொலியில் தொகுத்து வழங்கிய பாடல்களை இணையத்தளத்திலும் வழங்க முடியாதா என்ற எண்ணத்தில் தோன்றியது தான் இந்தப்பதிவு. கீதாஞ்சலி என்ற பெயரிலேயே, தொடர்பதிவாக, ஒரு மணித்தியாலம் வரை கேட்கக்கூடிய நிகழ்ச்சியாக பதிவிட நினைக்கிறேன்..

உங்கள் ஆதரவுடன், கருத்துகளையும் தெரிவியுங்கள்.. நன்றி

download

 

photo credit: Google