கீதாஞ்சலி – மலேஷியா வாசுதேவன் பாடல்கள்

மலேஷியா வாசுதேவன்- பாடகராக, நடிகராக நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தவர். அவருடன் நேரடியாக பரிச்சயம் உள்ளவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட மென்மையான, மனிதநேய சுபாவமுடையவர் என்பது தெரியும். எல்லோரையும் அம்மா என்று அழைக்கும் அவர், மாமிச உணவு உண்ணாதவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..
படத்தில் கொடூர குணமுள்ள வில்லனாக தோன்றும் அவரின் குழந்தை மனசை அவருடன் பழகிப்பார்த்தவர்களுக்கு தெரியும். தன்தட்டிலுள்ள உணவை எடுத்து, என் தட்டில் போட்டு சாப்பிடும்மா என்று சொன்ன வேளையில் தாயாகத் தெரிந்தார். எப்போதும் நேர்மையுடன் இரு. உன் வேலையை மட்டும் ஒழுங்காக செய் என்று சொல்லும் போது தந்தையாகத் தெரிந்தார்.. காதலில் விழுந்தேன் என்று தெரிந்தும், மேடையில் எனக்காக பாடல்கள் பாடியபடியே திரும்பிப் பார்த்து புன்னகைக்கையில் நண்பராக தெரிந்தார்.. பழகிய நாட்கள் குறைவாக இருந்தாலும், ஆயுளுக்கும் அவர் விட்டுச் சென்ற அன்பு போதும் மலேஷியா அங்கிள்..

பெப்ரவரி 20ம் திகதி அவர் இவ்வுலகை விட்டு நீங்கிய தினம்..அவரின் நினைவாக, எனக்குப் பிடித்த அவரின் பாடல்கள்..

 

கோழி கூவுது திரைப்படத்தில் அவரின் காந்தக் குரலில்
பூவே இளைய பூவே..

 

விவசாயிகளின் வலி சொல்லும் இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம்.. மனசுக்குள் சின்னதாய் ஒரு சங்கடம்..

 

அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் இந்தப் பாடலில் அன்பையும், அரவணைப்பையும், கையறு நிலையையும் தன் கம்பீரக் குரலால் அள்ளித்தெளித்திருப்பார்..

 

காதல் பாடல் ஒன்று இது.. குரலை இன்னும் கொஞ்சம் மாற்றி பாடியிருப்பார்

 

இந்தப்பாடல் கேட்கும் போதெல்லாம் மேடையில் மெதுவாய் திரும்பிப் பார்த்து கடைவாய்க்குள் சிரித்தபடி அவர் பாடியது எப்போதும் ஞாபகம் வரும்..

 

Name the song, I’ll sing it  என்று சொல்வார் போல. எந்த வகையான பாடல் கொடுத்தாலும் அனயாசமாக பாடமுடியும் ஒரு சில பாடகர்களில் இவரும் ஒருவர் என்பதை நிரூபிக்கும் மற்றொரு பாடல் இது..

ஆண்டுகள் கடந்தாலும், அவர் குரல் காந்தமாய் கவரும் பாடல்களில் ஒன்று.. ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்திலிருந்து

 

சிறுவயதில் இலங்கை வானொலியில் ஒலிக்கும் தங்கநகையக விளம்பரம் ஒன்றில் இடம்பெற்ற பாடல் இது.. இன்று கேட்டாலும், அந்தக் காலகட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றுவிடும் பாடல்..

 

மறக்க முடியாத மலேஷியா வாசுதேவன் அவர்களின் பெயர் சொல்லும் பாடல்..

 

இன்னாருக்கென்றே சில பாடல்களை எழுதியிருப்பார்களோ என்று சில வேளைகளில் நினைப்பதுண்டு.. இது மலேஷியா வாசுதேவனுக்காகவே எழுதப்பட்ட பாடலே.. அவரன்றி வேறொருவர் பாடியிருந்தால் இப்படி இனிமையாய் இருந்திருக்குமா என்று கேட்கும் போதெல்லாம் எண்ண வைக்கும் பாட்டு..

 

 

தங்கைக்காய் உருகும் அண்ணாவாய்.. பாசம் இழைந்தோடும் குரலில்..

 

சுகம் சுகமே – இந்தப் பாடல் கேட்கும் போது தானே..

 

இன்னும் இன்னும் அத்தனை பாடல்களையும் அளிக்க வேண்டும் என்று நினைத்தாலும்.. ஒரு மணிநேரத்திற்குரிய பாடல்களை மட்டும் இந்த பதிவில் தந்திருக்கின்றேன்.. மீண்டும் மற்றொரு பதிவில் இன்னும் பல மனது மயக்கும் பாடல்களுடன் சந்திப்போம்..
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்..
அன்புடன் மாயா

Malaysia Vasudevan

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s