Tag Archive | கீதாஞ்சலி

கீதாஞ்சலி – மலேஷியா வாசுதேவன் பாடல்கள்

மலேஷியா வாசுதேவன்- பாடகராக, நடிகராக நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தவர். அவருடன் நேரடியாக பரிச்சயம் உள்ளவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட மென்மையான, மனிதநேய சுபாவமுடையவர் என்பது தெரியும். எல்லோரையும் அம்மா என்று அழைக்கும் அவர், மாமிச உணவு உண்ணாதவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..
படத்தில் கொடூர குணமுள்ள வில்லனாக தோன்றும் அவரின் குழந்தை மனசை அவருடன் பழகிப்பார்த்தவர்களுக்கு தெரியும். தன்தட்டிலுள்ள உணவை எடுத்து, என் தட்டில் போட்டு சாப்பிடும்மா என்று சொன்ன வேளையில் தாயாகத் தெரிந்தார். எப்போதும் நேர்மையுடன் இரு. உன் வேலையை மட்டும் ஒழுங்காக செய் என்று சொல்லும் போது தந்தையாகத் தெரிந்தார்.. காதலில் விழுந்தேன் என்று தெரிந்தும், மேடையில் எனக்காக பாடல்கள் பாடியபடியே திரும்பிப் பார்த்து புன்னகைக்கையில் நண்பராக தெரிந்தார்.. பழகிய நாட்கள் குறைவாக இருந்தாலும், ஆயுளுக்கும் அவர் விட்டுச் சென்ற அன்பு போதும் மலேஷியா அங்கிள்..

பெப்ரவரி 20ம் திகதி அவர் இவ்வுலகை விட்டு நீங்கிய தினம்..அவரின் நினைவாக, எனக்குப் பிடித்த அவரின் பாடல்கள்..

 

கோழி கூவுது திரைப்படத்தில் அவரின் காந்தக் குரலில்
பூவே இளைய பூவே..

 

விவசாயிகளின் வலி சொல்லும் இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம்.. மனசுக்குள் சின்னதாய் ஒரு சங்கடம்..

 

அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் இந்தப் பாடலில் அன்பையும், அரவணைப்பையும், கையறு நிலையையும் தன் கம்பீரக் குரலால் அள்ளித்தெளித்திருப்பார்..

 

காதல் பாடல் ஒன்று இது.. குரலை இன்னும் கொஞ்சம் மாற்றி பாடியிருப்பார்

 

இந்தப்பாடல் கேட்கும் போதெல்லாம் மேடையில் மெதுவாய் திரும்பிப் பார்த்து கடைவாய்க்குள் சிரித்தபடி அவர் பாடியது எப்போதும் ஞாபகம் வரும்..

 

Name the song, I’ll sing it  என்று சொல்வார் போல. எந்த வகையான பாடல் கொடுத்தாலும் அனயாசமாக பாடமுடியும் ஒரு சில பாடகர்களில் இவரும் ஒருவர் என்பதை நிரூபிக்கும் மற்றொரு பாடல் இது..

ஆண்டுகள் கடந்தாலும், அவர் குரல் காந்தமாய் கவரும் பாடல்களில் ஒன்று.. ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்திலிருந்து

 

சிறுவயதில் இலங்கை வானொலியில் ஒலிக்கும் தங்கநகையக விளம்பரம் ஒன்றில் இடம்பெற்ற பாடல் இது.. இன்று கேட்டாலும், அந்தக் காலகட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றுவிடும் பாடல்..

 

மறக்க முடியாத மலேஷியா வாசுதேவன் அவர்களின் பெயர் சொல்லும் பாடல்..

 

இன்னாருக்கென்றே சில பாடல்களை எழுதியிருப்பார்களோ என்று சில வேளைகளில் நினைப்பதுண்டு.. இது மலேஷியா வாசுதேவனுக்காகவே எழுதப்பட்ட பாடலே.. அவரன்றி வேறொருவர் பாடியிருந்தால் இப்படி இனிமையாய் இருந்திருக்குமா என்று கேட்கும் போதெல்லாம் எண்ண வைக்கும் பாட்டு..

 

 

தங்கைக்காய் உருகும் அண்ணாவாய்.. பாசம் இழைந்தோடும் குரலில்..

 

சுகம் சுகமே – இந்தப் பாடல் கேட்கும் போது தானே..

 

இன்னும் இன்னும் அத்தனை பாடல்களையும் அளிக்க வேண்டும் என்று நினைத்தாலும்.. ஒரு மணிநேரத்திற்குரிய பாடல்களை மட்டும் இந்த பதிவில் தந்திருக்கின்றேன்.. மீண்டும் மற்றொரு பதிவில் இன்னும் பல மனது மயக்கும் பாடல்களுடன் சந்திப்போம்..
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்..
அன்புடன் மாயா

Malaysia Vasudevan

 

கீதாஞ்சலி..

பாலுமகேந்திரா – ஒரு சகாப்தம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தாலும், கலை வாழ்க்கையைப் பொறுத்தவரை தனக்கென ஒரு அடையாளத்தை பதிந்து விட்ட மனிதர் அவர்..
ஒளிப்பதிவாளர், இயக்குனர். எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களின் தன் திறனை வெளிப்படுத்திய
அவரின் நினைவாக..  அவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து தெரிவு செய்த பாடல்கள் இன்று கீதாஞ்சலியில்..

1979ம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் திரைப்படத்திலிருந்து ஜெயச்சந்திரன் சுசீலா பாடிய பாடல்..

மூடுபனி. 1980ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய திரைப்படம். பிரதாப் போத்தன், அமரர் ஷோபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற பிரபல்யமான பாடல், யேசுதாஸ் அவர்களின் குரலில்..

மூன்றாம் பிறை.. தமிழ் திரைப்படங்களின் போக்கை மாற்றிய மற்றுமொரு திரைப்படம்.. மனசைப்பிசையும் இசையும் வரிகளும் கொண்ட பால் இது, கான காந்தர்வன் அவர்களின் குரலில்..

கேட்கும் அத்தனை தடவைகளும், நாம் வாழ்க்கையையும், மரணத்தையும் நினைவூட்டிச்சென்று, நம்மை ஒரு கணம் திகிலுக்குள்ளாக்கும் பாடல்.. நீங்கள் கேட்டவை திரைப்படத்திலிருந்து..

ரஜனிகாந்த் மாதவி நடிப்பில் அமரர் பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய திரைப்படத்திலிருந்து.. இனிய பாடல் ஒன்று..

இரு தாரங்களுக்கிடையில் அல்லாடும் ஒரு மனிதனின் கதை – இரட்டை வால் குருவி.. 1987ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படம் இது.. ஜானகி அவர்களின் குரலில்..

தமிழ் திரையுலகில் திருப்புமுனைகளை அளித்த படங்களில் ஒன்று வீடு.. பார்த்தவர்கள் கண்களைக் குளமாக்கிய இந்தத் திரைப்படம், தனக்கென்று ஒரு கூடு இருக்க வேண்டும் என நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தின் முயற்சிகளையும், அதன் வலியையும், யதார்த்தத்துடன் வெளிக்கொணர்ந்திருந்தது.. இந்தப்படத்தில் எந்தவொரு பாடல்களும் இடம்பெறவில்லை.. இளையராஜா அவர்களின் பின்னணி இசைச்சேர்க்கையில் இடம்பெற்ற இப்படத்திலிருந்து ஒரு காட்சி..

இளம் தலைமுறையினரோமுடும் தம்மால் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை இயக்குனர் பாலுமகேந்திரா நிரூபித்த திரைப்படம் – வண்ண வண்ணப் பூக்கள்.. 1992ம் ஆண்டு பிரஷாந்த், மௌனிகா, விநோதினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது..

நுட்பமான மனித உணர்வுகளை திரைப்படங்களில் வெளிக்கொணர்வதென்பது இலகுவானதல்ல.. அதனை செய்ய முடிபவர்களே சிறந்த இயக்குனர்கள்.. இந்தப்பாடலை நீங்கள் கேட்கும் போதோ, பார்க்கும் போதோ எழும் உணர்வுகள், இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆளுமையை சொல்கிறது.. மறுபடியும்..

இரு தாரங்களால் எழும் பிரச்சனை பற்றி, கொஞ்சம் நகைச்சுவை கலந்து இயக்குனர் பாலுமகேந்திரா எடுத்த திரைப்படம்.. இயல்பான பாத்திரங்களோடு, எளிய நடையில்.. துன்பங்களை satire முறையில் சொல்லியிருப்பார்..

ராமன் அப்துள்ளா திரைப்படத்தில், பெயரைப்போலவே கொஞ்சம் சீரியசான விஷயத்தை நேர்த்தியாக தொட்டுச் சென்றிருப்பார்.. அப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்,அருண்மொழி, பவதாரணி பாடியது..

ஜூலி கணபதி – ஸ்டீபன் கிங்  எழுதிய மிசரி நாவலைத் தழுவி வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் மீளாக்கமாகும்.. மீண்டும் ஒரு முறை மனித மனதின் நுண் உணர்வுகளை இலாவகமாக இத்திரைப்படத்திலும் பாலுமகேந்திரா அவர்கள் கையாண்டிருப்பார்..

மலையாளத்தில் அவர் இயக்கிய யாத்ரா திரைப்படத்தின் மீளுருவாக்கமான இந்த படம், காவல்துறையின் அராஜகத்தை ஒரு புறம் எடுத்துக்காட்டினாலும், அழகிய மெல்லிய காதல் உணர்வுகளையும் பார்ப்பவர்களின் மனதில் நிலை நிறுத்தத் தவறவில்லை..

மரணிக்க முன்னர், தன்னை ஒரு கைதேர்ந்த நடிகனாகவும் இனம்காட்டிய கலைஞனின் இறுதிப்படம் தலைமுறைகள்.. இளையராஜாவின் இசைச்சேர்க்கையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தீம் இசை..

கீதாஞ்சலி

காதல் காதல் காதல்..

எங்கு காண்பினும் காதல் களை கட்டுகிறது.. வியாபார யுக்திகளுடன் சேர்ந்து மனிதக் காதலர்களும், தெய்வீகக் காதலை நோக்கிய தேடலில் ஈடுபடும் இந்த மாதத்தில் இன்னுமொரு இன்சுவை கீதங்களின் தொகுப்பு கீதாஞ்சலியில்..

என காதல் மனதில் வடித்த சிலை நீ..எனை மயக்கி சிலையாக்கி சிதறடிக்கிறாய்..

என் பூ மனதைக் கொள்ளை கொண்ட புவிராஜா நீ..

என் முதல் கனவு நீ.. மனதில் நிறைந்த உன் நினைவுகள் மறையாமல் மனசுக்குள் பொக்கிஷமாய் பூட்டி வைப்பேன்..

நதியோர நாணல் வந்து உன் பெயர் சொல்ல நாணத்தில் நீலமாகியது என் நீள விழிகள்

அலைபாய்ந்த எண்ணங்கள் உன் அன்புள்ளத்தின் அரணுக்குள் அடைக்கலமாகி சிலையானது..

 

செக்கர் வானத்தின் மேக ஓவியங்களாய்.. காதல் தூரிகையால் பாச வர்ணம் தீட்டினாய்..

நான் தேடிக்கண்டடைந்த பேரின்ப சாம்ராஜ்யத்தின் காதல் தேவதை நீ..

மாலைக்கருக்கலில் தாரகைகள் மத்தியில் தங்கநிலவாய் உன்னைக் கண்டு காதல் கொண்டேன்

காதல் கள்ளுண்டு தள்ளாடும்  என் தாரிகையை தூரிகையால் ஓவியமாய் தீட்டி என் தனிமைக்கு துணையாக்கினேன்..

ஈட்டி விழிகளாய் வேட்டையாடி, இதய அறைக்குள் அடைத்துவைத்தாய்..

உன் காதல் வசியத்தில் சிக்கி காணாமல் போய்விட்டேன்..

தூது போ மேகமே.. தூரமாய் நிற்கும் என் தேவனிடம்

கீதாஞ்சலி..

சோகப்பாடல்கள் என்றால் அது 80 களில் வந்த பாடல்கள் தான். இன்றும் எத்தனையோ உடைந்த காதல்களுக்கும், இடிந்த மனதுகளுக்கும், சோக இசையாலே ஒத்தடம் கொடுத்து ஆறுதல் தருவது இந்தக் காலப் பாடல்களே..

கேட்கும் போதே ஒவ்வொரு ஜீவ அணுக்களுக்குள்ளும் ஊடுருவி, நம்மை ஏதோ ஒரு ZEN  நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றன இப்பாடல்கள்.. என் முந்தைய தலைமுறைக்குப் பிடித்த இந்தப் பாடல்கள், எனக்கும், எனக்குப் பின்வரும் தலைமுறைக்கும் கூட பிடிக்கும் என்பதே இந்தப் பாடல்களின் வீச்சுக்கு சான்று..
ஆண்குயில்கள் தனியாய் இசைபாடும் பாடல்கள் இன்று உங்களுக்காய்..

ஒரேயொரு பார்வை பார்த்தால் என்ன மானே..

நீ நடந்த பாதையெல்லாம் உன் நினைவுகளைத் தேடுகின்றேன்

ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை.. சாவொன்று தானா நம் காதல் எல்லை

தேடி வந்த வேளை வேடன் செய்த வேலை.. சிறகுகள் உடைந்ததடி, குருதியில் நனைந்ததடி

சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்.. நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்..

காத்தோடு போகும் காத்தாடி நான்..

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா?

காற்றே பூங்காற்றே.. என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய்ச்சொல்லு

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை நான் தூதுவிட்டேன்

களையிழந்த மாடத்திலே முகாரி ராகம்

அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா?

காதல் பொய்யானது வாழ்கை மெய்யானது..

அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே

பொழுதாகிப்போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னைத் தேடுது..

கீதாஞ்சலி..

80 கள் போலவே 90 களில் வெளிவந்த பாடல்களும், மகத்துவமிக்கவைதான். ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பகாலம், தேவா, வித்தியாசாகர் போன்றோர் இசைஞானியின் இசையோடு போட்டி போட்ட காலம்..  அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த மனது மறக்காத காதல் கீதங்கள் இன்று கீதாஞ்சலியில்..

 

உனக்கும் எனக்கும் உள்ள பந்தம், தெய்வம் தந்தது..

திரைப்படம்: எல்லாமே என் காதலி

 

உன் விழி சொல்லும் பாஷைகளை மொழிமாற்றிப்பார்த்தேன்.. காதல் என்று சந்தமாய் சொல்கிறது சத்தம் போடும் இதயம்..

திரைப்படம்: சுபாஷ்

 

சர்க்கரைப்பாகால் வர்ணம் செய்து உன் பெயரை உள்ளமெங்கும் எழுதி வைத்து ரசிக்கிறேன்..

திரைப்படம்: செங்கோட்டை

 

இக்கணம் இறக்கலாம் போலிருக்கிறது இதழால் ஒற்றியெடுத்து உன் இதயத்து ரகஸ்யங்களை சொல்லும் காதலில் திளைத்து எழமுடியாமல் தவிக்கும் போது..
திரைப்படம்: தாயின் மணிக்கொடி

 

இந்தக் கனவுக்குள் புதைந்து கரைந்து போய்விடுகிறேன்..
மலருக்குள் மறைந்திருக்கும் நறுமணம் போல்
உன் காதல் ஆடையாய் தழுவிநிற்கும்
இந்தக் கனவுக்குள்..

திரைப்படம்: லவ்பேர்ட்ஸ்

 

தனியாய் தவிக்கவிட்டு எங்கிருந்தாய் இத்தனை நாளாய்..
தவித்து உறைந்து திகைத்து நிற்கும் என்னை விட்டு நீங்காதே காதலே..

திரைப்படம்: மே மாதம்

 

நேரம் காலம் தேதி பார்க்காமல் கண்ணுக்குள் நுழைந்தாய்
கணந்தோறும் உன் காதலால் கரைந்து போகிறேன்..

திரைப்படம்: கோயமுத்தூர் மாப்பிள்ளை

 

நீ எனக்குள் நுழைந்த நேரம் இதயத்துக்குள் மலைமுகட்டு மலர்த்தோட்டத்தில் மழைபொழியும் வாசம்..

திரைப்படம்: வான்மதி

 

ப்ரியத்துக்கு ப்ரியம் வந்ததில் பிரியாத நேசம் வந்தது உன்மேல் எனக்கு

திரைப்படம்: ப்ரியம்

 

உன் காதல் மெட்டுக்களால் இசைந்து போய் நிற்கிறது உன் நினைவுகளின்றி இயங்க மறுக்கும் இதயம்..

திரைப்படம்: ராசையா

 

உன் மௌனத்தால் கொன்ற என்னை மந்தகாசப் புன்னகையால் உயிரூட்டிவிடு

திரைப்படம்: கர்ணா

 

 

என் காதல் நூலில் கலந்திருக்கும் மை போல உள்ளத்து செல்களிலெல்லாம் உன் காதலை எழுதிச் சென்றால் என்ன செய்ய நான்..

திரைப்படம்: அரசியல்

 

முதன்முதலில் உன் முகம் பார்த்த கணம் முதல்

மயங்கி நிற்கிறேன்..

முடிவிலியாய் தொடரும்

உன் முத்தத்திற்குள்

மூச்சுவிட முடியாமல் அமிழ்ந்தபடி..